games

img

நடப்பு சாம்பியன் ரடுகானு அவுட்

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் கணிக்க முடியாத  நபராக டென்னிஸ் உலகை மிரட்டி வரும் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு, பிரான்ஸ் வீராங்கனை அலிசி கார்னட்டிடம் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். கடந்த அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் எம்மா ரடுகானு சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா தனது முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங் கனை காலின்ஸிடம் 6-7 (5-7), 3-6  என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரி லிருந்து வெளியேறினார். இதே போல செரினா வில்லியம்ஸின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸும் முதல் சுற்றில் வெளியேறி னார்.