games

img

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை அறிவித்தது இந்தியா  

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை இந்தியா அறிவித்தது.  

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இதை உலக செஸ் கூட்டமைப்பு, ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் நடத்துகின்றன. மொத்தம் 180 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் விளையாட உள்ளன.  

இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்திய சார்பில் பங்கேற்கும் 3வது அணியை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சி அணியில், தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 

;