டிக்கெட் பெறுவது எப்படி?
செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் ரசிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம். போலியான தகவல் மூலம் டிக்கெட் பெற்றது தெரிந்தால் நடவடிக்கை அல்லது முன்கூட்டியே தெரிந்தால் டிக்கெட் நிராகரிக்கப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் ஒரு நபருக்கான கட்டணத்தொகை ஆகும்.
ஹால் - 2 :
1. பள்ளி மாணவர்கள், பெண்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ரூ.200 (2 மணிநேரம் மட்டுமே அனுமதி)
2. தமிழ்நாடு உள்ளூர் மக்கள் (?) உட்பட இந்திய மாநிலத்தவர்களுக்கு : ரூ.2000 (24 மணிநேரம் அல்லது போட்டி நடக்கும் நேரம் வரை)
3. வெளிநாட்டவர்களுக்கு: ரூ.6000 (24 மணிநேரம் அல்லது போட்டி நடக்கும் நேரம் வரை)
ஹால் - 1 :
1. பள்ளி மாணவர்கள், பெண்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ரூ.300 (2 மணிநேரம் மட்டுமே அனுமதி)
2.தமிழ்நாடு உள்ளூர் மக்கள் (?) உட்பட இந்திய மாநிலத்தவர்களுக்கு: ரூ.3000 (24 மணிநேரம் போட்டி நடக்கும் நேரம்)
3.வெளி நாட்டவர்களுக்கு: ரூ.8000 (24 மணி நேரம் போட்டி நடக்கும் நேரம்)
ஹால் : 1, 2 வேறுபாடுகள் என்ன?
ஹால் - 1 : இந்தியா உள்ளிட்ட முதல் தரவரிசை அணிகள் விளையாடும் பிரிவுகள். இதில் திறந்த நிலையில் 28 போர்டுகளும், பெண்கள் பிரிவில் 21 போர்டுகளும் உள்ளன. இந்த ஹால்-1 பிரிவில் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றாலும் ஆட்டம் பரபரப்பாக அதிரடியாக இருக்கும்.
ஹால் - 2 : இரண்டாம் தரவரிசையில் உள்ள அணிகள் ஹால் : 2-இல் விளையாடும். அதாவது பெரும்பாலான அணிகள் ஹால்: 2-இல் விளையாடும் என்பதால் சர்வதேச அளவில் அந்த அரங்கிற்கு மவுசு அதிகம்.
ஆன்லைன் டிக்கெட் பெற லிங்க் : https://tickets.aicf.in/
அனுமதி கிடையாது:
”செல்போன்கள், ஸ்மார்ட் கடிகாரங்களுக்கு அனுமதி கிடையாது. அதனை பாதுகாத்து வைக்க பாதுகாப்பு பெட்டக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பார்க்கிங் வசதியும் உள்ளது.