கோல் மழை பொழிந்த ஜப்பான்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் மகளிர் 9-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்களன்று நடைபெற்ற “குரூப் சி” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் ஜப்பான் - ஸ்பெயின் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் கோல் மழை பொழிந்து 4-0 கணக்கில் வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. ஜப்பான் அணியிடம் தோல்வி கண்டாலும் புள்ளிகளின் அடிப்படையில் ஸ்பெயின் அணி நாக் அவுட் சுற்றில் காலடி வைத்தது. ஜாம்பியா அசத்தல் “குரூப் சி” பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. ஜாம்பியா அணி ஆறுதல் வெற்றியுடனும், கோஸ்டாரிகா ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.
இன்றைய ஆட்டங்கள்
வியட்நாம் - நெதர்லாந்து
நேரம் : மதியம் 12:30 மணி
போர்ச்சுக்கல் - அமெரிக்கா
நேரம் : மதியம் 12:30 மணி
சீனா - இங்கிலாந்து
நேரம் : மாலை 4:30 மணி
ஹைத்தி - டென்மார்க்
நேரம் : மாலை 4:30 மணி
தொடரை கைப்பற்றுவது யார்?
இந்தியா - மே.இ. தீவுகள் இன்று பலப்பரீட்சை
மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தின் முடிவில் ஆளுக்கொரு வெற்றியுடன் இரு அணிகளும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் வைத்துள்ள நிலையில், கடைசி ஒருநாள் போட்டி செவ்வாயன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரமாக களமிறங்குவதால் கடைசி ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா -
மே.இ. தீவுகள்
நேரம் : இரவு 7:00 மணி
இடம் : லாரா மைதானம், டிரினாட்
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (ஒடிடி)
இந்தியாவிடம் திடீரென மே. இ. தீவுகள் பாய்ந்தது எப்படி?
சாம்பியன் அணிகளில் ஒன்றான மேற்கு இந்தியத் தீவுகள் அணி முன்னணி வீரர்கள், நட்சத்திரங்கள் இல்லாமல் மிக மோச மான நிலையில் உள்ளது. இதன் விளை வால் நடப்பாண்டு இறுதியில் நடைபெற விருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் சோர்ந்து போயுள்ளது. இதனால் மேற்கு இந்திய தீவுகள் நாடு மற்றும் கிரிக்கெட் வாரியம் பல அதிரடி முடிவுகளை கையிலெடுத்து ராணுவத்திற்கு நிகராக பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சியால் இந்திய அணியுட னான தொடரில் ஓரளவுக்கு மீண்டு வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் திணறியது. மற்ற போட்டிகளில் ஆட்டத் திறனில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனை புரிந்து கொள்ளாமல் அசால்ட்டாக விளையாடிய இந்திய அணியை 2-வது ஒருநாள் போட்டியில் ஒரு புரட்டு புரட்டியெடுத்துவிட்டது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
இலவசம் அளித்து கொண்டாடிய பர்படாஸ் நகரம்
பலத்த அடிக்கு பின்னர் பார் முக்கு வந்துள்ள மேற்கு இந்திய தீவு கள் அணி இந்திய அணியை வீழ்த்தியதை ஏதோ உல கக்கோப்பை வென்றது போல அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 2-வது ஒரு நாள் போட்டி வெற்றிக் கொண் டாட்டத்தை, கொண்டாடும் வகையில் பர்படாஸ் நகரத்தில் உள்ள ஒரு உணவகம் ரசிகர் களுக்கு இலவச ஒயின், ரம்களை வழங்கியது.