games

img

அறிமுகமாகும் மகளிர் யு-19 உலகக் கோப்பை - ஐசிசி அறிவிப்பு 

2023 மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு, யு-19 டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் ஆலர்டைஸ் தெரிவித்துள்ளார்.  

ஆடவர் யு-19 உலகக் கோப்பைப் போட்டிகளைப் போல மகளிர் பிரிவிலும் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இன்று ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் ஆலர்டைஸ் வெளியிட்டார். அதில், மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டதில்லை. முதல்முதலில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடத்த ஐசிசி முன்வந்திருப்பதால் பல புதிய திறமைகளைக் கண்டெடுக்க இப்போட்டி மிகவும் உதவும் என எதிர்பார்க்கிறோம்.

2023 மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு, யு-19 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. ஐசிசி கூட்டத்தில் இதுபற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என ஆலர்டைஸ் தெரிவித்துள்ளார். 

;