games

img

விளையாட்டு...

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து  நியூசிலாந்து அதிர்ச்சி தோல்வி

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.  செவ்வாயன்று நடைபெற்ற “குரூப் ஏ” பிரிவு லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து பிலிப்பைன்ஸ் அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் அணி நியூசிலாந்து அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. மகளிர் கால்பந்து உலகில் பிலிப்பைன்ஸ் அணியை விட நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

ஜப்பான் - கோஸ்டாரிகா
நேரம் : காலை 10:30 மணி 
ஸ்பெயின் - ஜாம்பியா
நேரம் : மதியம் 1:00 மணி
கனடா - அயர்லாந்து
நேரம் : மாலை 5:30 மணி

சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஒடிடி)

பேசுவதற்கு ஒன்றுமில்லா செய்தி

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொட ரில் விளையாடி அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டிரா செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி 21 ஆண்டுகால வரலாற்றை கை வசம் வைத்து இருப்பதாக பெருமை கலந்த  செய்திகள் உருண்டோடி வருகின்றன.  ஆனால் உண்மையில் இது வெறும்  சாதாரண ஒரு செய்திதான். வரலாறு என்று கூறுவதற்கு 10% விஷயங்கள் கூட இல்லை. காரணம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பரிதாப நிலை யில் களமிறங்கியது. ஜேசன் ஹோல்டர் அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச் ஆகி யவர்கள் மட்டுமே சீனியர்கள். மற்ற வர்கள் கிரிக்கெட் உலகிற்கு வந்த  புதுமுக குழந்தைகள். குழந்தைகளி டம் அசுர பலத்தில் உள்ள இந்தியா வெற்றியை ருசித்து தொடரை கைப் பற்றி இருப்பது ஒரு சாதாரண விஷ யம்தான். 

உலக பேட்மிண்டன் தரவரிசை 
சாத்விக் - சிராக் ஜோடி 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

தென் கொரிய சர்வதேச பேட் மிண்டன் தொடர் நிறைவு பெற்ற நிலையில், சர்வதேச பேட்மிண் டன் சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தென் கொரிய ஓபனில் பட்டம் வென்ற இந்திய அணியின் இரட்டையர் பிரிவு ஜோடியான சாத்விக் - சிராக் ஜோடி, சீன ஜோடியை (லியாங் வெய் - வாங் சாங்) பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்து க்கு முன்னேறியது. இந்த பிரிவில் இந்திய ஜோடியான இந்தோனேசியா ஜோடியான அல்பியின் - அர்டிய ன்டோ முதலிடத்தில் உள்ளது.  ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனோய் 10-வது இடத்தில் உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 17-வது இடத்தில் உள் ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஆக்ஸல்சென் முத லிடத்திலும்,  மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் யாமகுச்சி முதலிடத்தில் உள்ளனர். (மற்ற பிரிவுகளுக்கான தர வரிசை திடமாக வெளியிடப்படவில்லை - மாலை 4 மணி நிலவரம்)