games

img

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் வெள்ளியன்று தொடங்குகிறது. இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.  இந்த உலகக்கோப்பை தொடர் ஆக்லாந்து, மவுண்ட் மவுங்கானுயி, ஹாமில்டன்,  கிறிஸ்ட்சர்ச், வெல்லிங்டன் ஆகிய 5 நகர மைதானங்களில் நடைபெறு கிறது.  ரவுண்ட் - ராபின் சுற்றுகள் மூலம் முதல்  4 இடத்தை பிடிக்கும் அணிகள் அரை யிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும். அரை யிறுதி ஆட்டங்கள் மார்ச் 30-ஆம் தேதி  தொடங்குகிறது. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. 

இன்றைய ஆட்டம் 

நியூசிலாந்து - 
மேற்கு இந்தியத் தீவுகள் 
இடம்  : பே ஓவல், 
மவுண்ட் மவுங்கானுயி
நேரம் : காலை 6:30
(இந்திய நேரப்படி)