நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறு கின்றன. இதுதான் கடைசி லீக் ஆட்டங்களா கும். முதல் லீக்கில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வங்கதேசம் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படை யில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி கண்டிப்பாக வெற்றி பெற்றால் மட்டுமே 8 புள்ளிகளுடன் 3 அல்லது 4-வது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். இதே போல இந்திய அணியும் கண்டிப் பாக வென்றாக வேண்டிய சூழ்நிலையில் கள மிறங்குகிறது. தற்போது இந்திய அணி 6 புள்ளி களுடன் 5-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளு டன் 3-வது அல்லது 4-வது இடத்திற்கு முன் னேறும். இந்திய அணி வெற்றி பெற்றாலே கண்டிப்பாக அரையிறுதி வாய்ப்பு கிடைத்துவிடும். ரன்ரேட் அடிப்படையில் எவ்வித சிக்கலும் இல்லை.
இன்றைய ஆட்டங்கள்
இங்கிலாந்து - வங்கதேசம் (27-வது லீக்)
இடம் : பேசின் ரெசெர்வ், வெல்லிங்டன்
நேரம் : அதிகாலை 3:30 மணி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா (28-வது லீக்)
இடம் : ஹாக்லே ஓவல், கிறிஸ்ட்சர்ச்
நேரம் : காலை 6:30 மணி
ஐபிஎல்
இன்றைய ஆட்டங்கள்
தில்லி - மும்பை (2-வது லீக்)
இடம் : பிராபௌர்ன் மைதானம், மும்பை
நேரம் : பிற்பகல் 3:30 மணி
பஞ்சாப் - பெங்களூரு (3-வது லீக்)
இடம் : பாட்டில் மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி