இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் (3 போட்டிகள்) விளையாடி வரு கிறது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றி யுடன் தொடரை சமனில் வைத்துள்ள நிலையில், தொடர் யாருக்கு என நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இங்கிலாந்து நாட்டின் மு கிய நகரான மான்செஸ்டர் நகரில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது.
இந்தியா - இங்கிலாந்து
இடம்: ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மான்செஸ்டர்
நேரம்: மதியம் 3:30 மணி
சேனல்: சோனி டென் வரிசைகள்
டி-20 உலகக்கோப்பை
அணிகள் விபரத்தை வெளியிட்டது ஐசிசி
உலகக்கோப்பை டி-20 தொடரின் 8-வது சீசன் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த தொட ருக்கான 16 அணிகள் தேர்வு செய்யும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அணிகளின் விபரத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அணிகள் விபரம்
ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கி லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம், இலங்கை, மேற்கு இந்தியத் தீவு கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர் லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம் பாப்வே, நெதர்லாந்து.