இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2-வது டி-20 ஆட்டம் சனியன்று இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரான பிர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றி என்ற ஒரே அடிப்படையில் களமிறங்குவதால் 2-வது டி-20 ஆட்டம் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து - இந்தியா
இடம் : எட்ஜ்பாஸ்டன் மைதானம், பிர்மிங்ஹாம்
நேரம் : இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ் (சோனி சிக்ஸ்)