games

img

விளையாட்டு செய்திகள்

கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெல்லுமா இந்தியா?

5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொட ரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தல நகரமான தரம்சாலாவில் வியாழனன்று தொடங்குகிறது. 

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் சம்பிர தாயம்தான் என்ற நிலையில், ஆறுதல் வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குகிறது. இதனால் தரம்சாலாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் அழகான இடம்
உலகளவில் மிக அழகிய கிரிக்கெட் மைதானமாக கருதப்படுவது இமாச்சலப்பிரதேசத்தின் தரம்சாலா மைதானம் ஆகும். காரணம் இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைச்சாரலில் உள்ளதால் இந்த மைதானம்  குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் இருக்கும். இதனால் ஏசி அறையில் கிரிக்கெட் விளையாடும்  உணர்வு இருக்கும். வெயில் இருக்காது என்பதால் வீரர்கள் எளிதில் சோர்வடையாமல் இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் விளையாடுவது போன்று புத்துணர்ச்சியுடன் நாள்முழுவதும் விளையாடுவார்கள்.

இந்தியா - இங்கிலாந்து
(முதல் நாள்)
நேரம் : காலை 9:30 மணி
இடம் : இமாச்சல் கிரிக்கெட் சங்க மைதானம்,  தரம்சாலா.
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி)

i132.1 கி.மீ வேகத்தில் சீரிய பந்து மும்பை வீராங்கனை உலக சாதனை

இந்தியாவில் ஆடவருக்கு ஐபிஎல் தொடர் நடத்தப்படு வதை போல மகளிருக்கும் டபிள்யு.பி.எல் (WPL - Women’s Premier League) என்ற பெயரில் டி-20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த  தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், தற்போது இரண்டாவது ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

செவ்வாயன்று நடைபெற்ற தில்லி - மும்பை அணிகளுக்கு எதிரான 12-ஆவது லீக் ஆட்டத்தில், தில்லி அணி  29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி வீராங்கனை ஷப்னிம் இஸ்மா யில் (தென் ஆப்பிரிக்கா) 132.1 கிமீ வேகத்தில் பந்துவீசி உலகசாதனை படைத்துள்ளார். ஷப்னிம் இஸ்மா யில் சாதனை உள்ளூர் டி-20 போட்டி களுக்கானது என்றாலும், இது ஒட்டு மொத்த மகளிர் கிரிக்கெட் உலகின்  உலகசாதனையாகவே கருதப்படு கிறது. காரணம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 128 கிமீ  வேகத்தில் பந்து வீசியதே உலக  சாத னையாக உள்ளது. இந்த சாதனையும் ஷப்னிம் இஸ்மாயிலிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.