games

img

தொடரை தக்க வைக்குமா இந்தியா? இன்று 4-வது டி-20 ஆட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா  வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக நகர்ந்து  வரும் நிலையில், 4-வது டி-20 ஆட்டம் குஜராத் மாநிலத்தின்  முக்கிய நகரான ராஜ்கோட்டில் வெள்ளியன்று நடைபெறு கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.