14-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் புதனன்று இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் சிறந்த பார்மில் இருப்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.