இந்திய சுழற்பந்துவீச்சை கண்டு அவ்வளவு நடுக்கமா?
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி தற்போது பார்டர் - கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (நாக்பூர்) இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், தில்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 6 விக்., வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு இந்தியாவின் சுழற்பந்துவீச்சுக்கு சாதக மாக உருவாக்கப்பட்ட மைதானங்களே காரணம் என ஆஸ்திரேலிய வீரர்கள் குழு, அந்நாட்டு ஊடகங்கள் காரண விவ ரங்களை அள்ளி வீசியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் தொடர் படுதோல்விக்கு மைதானமோ, ஆஸ்திரேலிய வீரர்களின் பார்ம் பிரச்ச னை என எதுவும் இல்லை, உண்மை யான காரணம் என்னவென்றால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணி யின் சுழற்பந்துவீச்சை கண்டு நடுங்கி, டெஸ்ட் போட்டியில் தேவையில்லாத ஸ்வீப் ஷாட்டை தேர்ந்தெடுத்தது தான். ஸ்வீப் ஷாட்டை பயன்படுத்தாமல் சுழற்பந்துவீச்சை திடமாக எதிர்கொண்டி ருந்தால் ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியை எதிர் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீப் ஷாட் என்றால் என்ன?
கிரிக்கெட் உலகில் சுழற்பந்துவீச்சு மிக கடினமான ஒன்றாகும். காரணம் வேகப்பந்துவீச்சு ஒரே பக்கம் 45 டிகிரி அளவிற்கு திசை திரும்பும். ஆனால் சுழற்பந்து வீச்சு 60 முதல் 110 டிகிரி அளவிற்கு இரண்டு பக்கம் அதாவது எந்த பக்கம் வேண்டுமானாலும் திசை திரும்பும். இதனால் கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சு என்றாலே பேட்டர்களுக்கு ஒருவித அலர்ஜி உள்ளது. சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க பேட்டர்கள் கண்டுபிடித்த ஷாட்தான் “ஸ்வீப் ஷாட்”. சுழற்பந்து டெலிவரி புள்ளியிலிருந்து ஸ்டெம்ப் பக்கமோ, ஸ்லிப் பக்கமோ திசை திரும்பும் பிரச்சனை யை தடுக்க, பந்தை டெலிவரி புள்ளியிலேயே தடுத்து திருப்பிவிடு வதுதான் “ஸ்வீப் ஷாட்” ஆகும். “ஸ்வீப் ஷாட்” ஒருநாள், டி-20 போட்டிகளில் நன்குபயன்படும். ஆனால் அதிக ஓவர்களை கொண்ட டெஸ்ட் போட்டிகளில் “ஸ்வீப் ஷாட்” வகைகளுக்கு வேலை இல்லை. என்பதை அறிந்தும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் தேவையில்லாமல் “ஸ்வீப் ஷாட்” வகையை அடித்து இந்திய அணியிடம் சின்னாபின்னமாயினர்.
ஆஸ்திரேலிய வீரர்களை திட்டம் வகுத்து ஏமாற்றிய அஸ்வின் - ஜடேஜா கூட்டணி
ஆஸ்திரேலிய வீரர்கள் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அதிகளவு “ஸ்வீப் ஷாட்” மூலம் ரன் குவிக்க ஆசைப்பட்டனர். இதனை நன்கு கணித்த இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஜோடியான அஸ்வின் - ஜடேஜா கூட்டணி பெரியளவு சூழலை வீசாமல் “ஷாட் பிட்ச்” வகை பந்துகளை திசை திரும்பாத வகையில் அடிக்கடி வேகத்தை குறைத்து ஆஸ்திரேலிய வீரர்களை ஏமாற்றி பெவிலியனுக்கு அனுப்பினார். இதில் சுவாரஸ்யமான விசயம் என்ன வென்றால் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி சுழற்பந்து வீச்சையே வீசவில்லை. பயிற்சியில் மேற்கொள்ளும் சாதாரண “ஷாட் பிட்ச்” பந்துவீச்சை போட்டு ஆஸ்திரேலிய வீரர்களை கலங்கடித்ததுதான்.
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்
இங்கிலாந்து - பாகிஸ்தான் (19-வது லீக்)
நேரம் : மாலை 6:30 மணி
இரண்டு ஆட்டங்களும் நியூலாண்ட்ஸ் (கேப்டவுன்) மைதானத்தில்... / சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஹாட் ஸ்டார்
இன்றைய
ஆட்டங்கள்
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் (20-வது லீக்)
நேரம் : இரவு 10:30 மணி
(இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு. செவ்வாயன்று முதல் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது)