games

img

தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 2-வது ஒருநாள் ஆட்டம்

ஒருநாள், டி-20 தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளை யாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் கடுமையாக போராடி வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக் கும் முனைப்பில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் என இரு அணி களும் வெற்றியின் மீது குறியாக இருப்ப தால் 2-வது ஒருநாள் போட்டி பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி ஞாயிறன்று போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

டிஎன்பிஎல்

இன்றைய ஆட்டம்

மதுரை - திருச்சி
நேரம் : மதியம் 3:15 மணி 

 

திண்டுக்கல் - சேலம்
நேரம் : இரவு 7:15 மணி

இடம் : இரண்டு ஆட்டங்களும் எஎஸ்சிஎப் மைதானத்தில் நடைபெறுகிறது (சேலம்)