games

img

ஐபிஎல் 2022 - லக்னோ அணிக்கு உதவி பயிற்சியாளராக விஜய் தஹியா நியமனம்  

ஐபிஎல் 2022-ல் லக்னோ அணிக்கு உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தஹியா புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.  

ஹரியானாவை சேர்ந்த 48 வயதான விஜய் தஹியா உத்தரப்பிரதேச அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தஹியா, இதற்கு முன் 2 முறை ஐபிஎல் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும் டெல்லி ராஞ்சி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.  

2022 ஐபிஎல் ஏலம் பிப்ரவரி மாதமும், ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதமும் நடக்கும் என தெரிகிறது.  ஏற்கனவே இருக்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன. 19 உள்நாட்டு வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்களை 8 அணிகளும் தக்கவைத்துள்ளன.  

இந்தியாவுக்காக 2 டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தஹியா, “லக்னோ ஐபிஎல் உரிமையுடன் பணிபுரிய எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லக்னோ அணி, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக ஆண்டி ஃப்ளவரை தலைமைப் பயிற்சியாளராகவும், கவுதம் கம்பீரை வழிகாட்டியாகவும் நியமித்தது.

;