games

img

வெங்கடேஷ் ஐயர் நலமாக உள்ளார்

துலீப் டிராபியில் மத்திய மண்டலம் - மேற்கு மண்டலம் அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் கோவை எஸ்என்ஆர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் பொழுது மத்திய மண்டலத்தின் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் (ஐபிஎல் - கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்), மேற்கு மண்டலத்தின் சிந்தன் காஜாவின் பேட்டிங் ரிட்டர்ன் பாலோ த்ரோ (பேட்டர் அடித்த பந்தை அவரிடமே ரன் அவுட்டிற்காக திருப்பி எறிதல்) வெங்கடே ஷின் கழுத்தை தாக்கியது.  சம்பவ இடத்திலேயே சுருண்ட வெங்கடேசை மீட்க பிட்ச் பகுதி க்குஆம்புலன்ஸ் வந்ததால் மைதானம் அதிர்ச்சியில் உறைந்தது. அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வெங்கடேஷ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,”தற்போது வெங்கடேஷ் நலமாக இருப்பதாகவும், அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார். நான் அவ ருடன் பேசினேன். அவர் இப்போது நன்றாக இருக்கிறார்” என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) அதிகாரி ஒருவர் கிரிக்பஸ் இணைய தள செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.  கழுத்தை நோக்கி பாலோ த்ரோ வீசிய சிந்தன் காஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.