தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இன்று 2-வது ஒருநாள் போட்டி
மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டி சனியன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் 2-வது ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 7:00 மணி
இடம் : பிரிஜ்டவுன், பார்படாஸ்
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (ஓடிடி)
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென்
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட் மிண்டன் போட்டி அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியா வின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், ஜப்பானின் கோக்கியை எதிரிகொண் டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென் 21-15, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கோக்கியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி னார். அரையிறுதியில் லக்ஷயா சென் இந்தோனேசியாவின் ஜோனாதனை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் சனியன்று காலை 6:30 மணிக்கு நடை பெறுகிறது. ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி)ல் இந்த ஆட்டத்தை காணலாம். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரனோய், டென்மார்க் நாட்டின் முன்னணி வீரரான ஆக்செல்சென்னி டம் 21-19, 18-21, 8-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். சாத்விக் - சிராக் ஜோடி அவுட் ஆடவர் இரட்டையர் பிரிவு காலி றுதியில் அதிகம் எதிர்பார்த்த இந்தியா வின் சாத்விக் - சிராக் ஜோடி சீன தைபேயின் லீ - வாங் ஜோடியிடம் 15-21, 25-23, 16-21 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறியது. சாத்விக் - சிராக் ஜோடி சமீபத்தில் நிறைவுபெற்ற தென் கொரிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து
அர்ஜெண்டினா - தென் ஆப்பிரிக்கா ஆட்டம் டிரா
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற “குரூப் ஜி” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீராங்கனைகளும் கோலடிக்க முட்டி மோதிக்கொண்டதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தது. இறுதியில் இரு அணிகளும் இரண்டு கோல் மூலம் போட்டியை டிரா செய்தன. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் மிக சுறுசுறுப்பாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்கள்
சுவீடன் - இத்தாலி
நேரம் : மதியம் 1:00 மணி
பிரான்ஸ் - பிரேசில்
நேரம் : மதியம் 3:30 மணி
பனாமா - ஜமைக்கா
நேரம் : மாலை 6:00 மணி
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ்,
பேன்கோடு (ஓடிடி)