பாரம்பரியமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
கிரிக்கெட் உலகில் உலகக் கோப்பைக்கு அடுத்து மிக முக்கிய தொடராக கருதப்படுவது ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணி கள் மோதும் ஆஷஸ் தொடர்தான். பாரம்பரிய கிளைமேக்ஸ் வரலாறால் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணி கள் எலியும் - பூனையுமாக மோதிக் கொள்வதால் 5 போட்டிகளை கொண்ட ஒவ்வொரு டெஸ்ட் ஆட்ட மும் டி-20 போல சுவாரஸ்யமாக நடைபெறும் என்பதால், ஆஷஸ் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் உலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆஷஸ் தொட ரின் 73-வது சீசன் இங்கிலாந்து நாட் டில் வியாழனன்று தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகளை டெஸ்ட் தொடரை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இங்கி லாந்து நாட்டிற்கு படையெடுத்துள்ள தால் முதல் போட்டி நடைபெறும் பிர்மிங்ஹாம் நகரம் திருவிழா நடை பெறும் இடம் போல களைகட்டி யுள்ளது.
மழை விளையாடுமா?
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி நடைபெறும் பிர்மிங்ஹாம் நகரத்தில் அடுத்த ஒருவார காலத்திற்கு மழைக்கான சூழல் உள்ள நிலை யில், ஆட்டம் மழையால் பாதிக் கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
(முதல் டெஸ்ட் : ஜூன் 15 - 20)
நேரம் : தினமும் மதியம் 3:30 மணிக்கு
இடம் : எட்ஜ்பாஸ்டன், பிர்மிங்ஹாம்
சேனல் : தொலைக்காட்சி - சோனி ஸ்போர்ட்ஸ், ஒடிடி - சோனி லைவ்