13-வது சீசன் உலகக்கோப்பை இந்தியாவில் வியாழனன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் நவம்பர் 19 வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
இங்கிலாந்து - வங்கதேசம்
நேரம் : காலை 10:30 மணி
இடம் : தர்மசாலா, இமாச்சலப்பிரதேசம்
மழை : லேசான வாய்ப்புள்ளது
பாகிஸ்தான் - இலங்கை
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : ராஜீவ்காந்தி மைதானம், ஹைதராபாத்
மழை : லேசான வாய்ப்புள்ளது
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ஒடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
தங்கம் மட்டும் போதும்... வெள்ளி, வெண்கலம் வேண்டாம்... வெறும் 20 பதக்கங்களுடன் புதிய வரலாறு படைத்த பஹ்ரைன்
மேற்கு ஆசியப் பகுதியின் பாரசீக வளை குடா பகுதியில் வெறும் 760 சதுர கிமீ அளவுள்ள குட்டி தீவு நாடு பஹ்ரைன். தனிநாடாக இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒரு மாவட்ட அளவு பரப்பளவு கூட பஹ்ரைன் நாட்டின் பரப்பளவாக இருக்காது. மொத்தமே 15 லட்சம் பேர் வசிக்கும் இந்த பஹ்ரைன் நாடு, சீனாவின் ஹாங்சோ நகரில் ஞாயிறன்று நிறைவுபெற்ற 19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்தியாசமான ஒரு சாதனையை அரங்கேற்றி யுள்ளது. அது யாதெனில் பதக்கப்பட்டியலில் மிக, மிக குறைந்த பதக்க எண்ணிக்கையில் (20) 9-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. பதக்கப்பட்டி யலில் 10-ஆவது இடத்தில் உள்ள வடகொரியா கூட மொத்தமாக 39 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், வடகொரியாவிற்கு மேல் 9-ஆவது இடத்தில் உள்ள பஹ்ரைன் வெறும் 20 பதக்கங்களு டன் மேல்நோக்கி இருப்பதற்கு காரணம் தங்கப்பத க்க எண்ணிக்கைதான். தங்கம் மட்டும் போதும்... வெள்ளி, வெண்கலம் வேண்டாம்...என்ற எண்ண த்துடன் 12 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளது பஹ்ரைன் நாடு. மொத்தமாக 21 பதக்கங்களை வென்றுள்ள மங்கோலியா நாடு கூட பதக்கப்பட்டி யலில் 22-ஆவது இடத்தில் உள்ள நிலையில், மங் கோலியாவை விட ஒருபதக்கம் குறைவாக வென்ற பஹ்ரைன் 12 இடங்கள் மேலே இருப்பது மிகவும் ஆச்சரியமிக்க விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைன் வரலாற்று வெற்றிக்கு காரணம்
தெரிந்த விளையாட்டு, ஆதிக்கம் செலுத்தக் கூடிய வீரர் - வீராங்க னைகள் என இரண்டு விசயங்களில் பஹ்ரைன் விளை யாட்டு அமைச்சகம் கவனமாக செயல்பட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டி யில் களமிறங்கியுள்ளது. அதாவது பஹ்ரைன் நாடு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் பதக்கம் வெல்லும் நிலையில் இருப்பவர்கள். மற்ற நாடு களை போல பெயரளவிற்கும், பெருமைக்கும் எந்த வீரர் - வீராங்கனைகளை யும் சீனாவிற்கு பஹ்ரைன் நாடு அழைத்துச் செல்லவில்லை. முக்கிய மாக பஹ்ரைன் அழைத்து வந்த வீரர் - வீராங்கனைகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பஹ்ரைன் நாட்டின் வரலாற்று வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.