நாங்களும் உடைப்போம்
டபிள்யு.பி.எல் தொடரில் சிக்ஸர் விளாசி கார் கண்ணாடியை உடைத்த வீராங்கனை
இந்தியாவில் ஆடவருக்கு ஐபிஎல் தொடர் நடத்தப்படு வதை போல மகளிருக்கும் டபிள்யு. பி.எல் (Women’s Premier League) என்ற பெயரில் கடந்தாண்டு முதல் டி-20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இர ண்டாவது சீசனில் தற்போது இரண் டாம் கட்ட லீக் ஆட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
இந்நிலையில், திங்களன்று 11- ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உத்தரப்பிரதேசம் ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்க ளூரு அணி 23 ரன்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்ற நிலையில், பெங்களூரு பேட்டிங்கின் பொழுது 19-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தில் எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலிய வீராங்கனை) சிக்ஸர் விளாசினார். பந்து மிட் விக்கெட்டை நோக்கி வேகமாக பறந்து பார்வையாளர் அரங்கிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியில் சென்று தாக்கியது.
காரில் பட்ட வேகத்தில் காரின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இதை கண்ட பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட அந்த அணி வீராங்கனைகளும், ரசிகர் களும் துள்ளிக்குதித்து ஆர்ப்பரிக்க பெங்களூரு சின்னசாமி மைதா னமே குலுங்கியது.
மகளிர் பிரிவிலும் ஆக்ரோஷம்...
பொதுவாக ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தான் சிக்ஸர் மூலம் கார் கண்ணாடி உடைப்பு, பெவிலியன் ஜன்னல்கள் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறும். மகளிர் கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அரங் கேறுவது கிடையாது. ஆனால் தற்போது மகளிர் கிரிக்கெட் பிரிவிலும் கார் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
அசால்ட்டாக 200 ரன்களை குவிக்கிறார்கள்
கடந்த காலங்களில் மகளிர் டி-20 கிரிக்கெட் பிரிவின் ரன்குவிப்பு சராசரியாக 150 ரன்களுக்குள் தான் இருந்தது. அதாவது மகளிர் கிரிக்கெட் அணிகள் 150 அணிகள் முதல் 165 ரன்களை தாண்டமாட்டார் கள். சிறப்பான துவக்கம் கிடைத்தால் அரிதாக எப்பொழுதாவது 170 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள், அவ்வளவுதான். இதுதான் மகளிர் டி-20 கிரிக்கெட்டின் நிலைமை.
ஆனால் சமீபகாலமாக ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக மகளிரும் ரன்கள் குவிக்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது நடைபெற்று வரும் டபிள்யு.பி.எல் தொடரில் 5 மகளிர் அணிகளும் ரன்மழை பொழிந்து வரு கின்றன. திங்களன்று நடைபெற்ற ஆட்டத்தில் கூட பெங்களூரு அணி 193 ரன்கள் குவித்த நிலையில், உத்தரப்பிரதேச அணி 175 ரன்கள் குவித்தது. இனி வரும் காலங்களில் மகளிர் கிரிக்கெட் அணி கண்டிப்பாக ஆடவர் அணிக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இன்றைய ஆட்டம்
குஜராத் - பெங்களூரு
(13-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : மாலை 7:30 மணி
இடம் : தில்லி மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி)
பாரீஸ்
சத்தமில்லாமல் போட்டி ஏற்பாடுகளை செய்யும் பிரான்ஸ் நாடு
உலகின் முக்கிய விளை யாட்டு தொடராக இருப்பது ஒலிம்பிக் தொடராகும். இந்த தொடரின் 33-ஆவது சீசன் வரும் ஜூலை 26 அன்று பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மற்ற நாடுகளை போல ஒலிம்பிக் கிரா மத்தின் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்ய விஷயங்களை இன்னும் வெளியிடாமலும், சத்தமே இல்லா மல் போட்டி ஏற்பாடுகளை செய்து வரு கிறது. இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் கிராமம் தொடர்பாக ஒருசில படங்கள் மட்டுமே இணையத்தில் வெளியாகி யுள்ளது. மற்ற நாடு கள் ஓராண்டுக்கு முன்பே ஒலிம்பிக் கிராம புகைப்படங்கள் மற்றும் செய்தி களை அடிக்கடி வெளியிடும் என்ற நிலையில், ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள பொழுதிலும், பிரான்ஸ் நாடு ஒலிம்பிக் கிராமம் தொடர்பான தகவல்களை இன்னும் வெளியிடாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.