games

img

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்...  இந்திய அணிக்கு கோப்பை...   

அகமதாபாத்
மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் 4 டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் சர்வதேச மைதானத்தில் வெள்ளியன்று (மார்ச் - 5) தொடங்கியது.  

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம் போல அஸ்வின் - அக்சார் சூழல் கூட்டணியில் சிக்கி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் (101 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (96) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் 365 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 160 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்க்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீண்டும் அதே அஸ்வின் (5 விக்.,)    - அக்சார் (5 விக்.,)  சூழல் கூட்டணியின் வலைக்குள் மீனைப் போல மாட்டிக்கொண்டனர். டேனியல் லாரன்ஸ் (50 ரன்கள்), கேப்டன் ஜோ ரூட் (30 ரன்கள்) ஆகியோர் மட்டும் ஆறுதல் அளிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் இங்கிலாந்து அணி 54.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிந்தது. இதன்மூலம் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆட்டநாயனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். சுற்றுப்பயணத்தின் அடுத்த நிகழ்வான 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் முழுவதும் இதே அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் மார்ச் 12-ஆம் தேதி தொடங்குகிறது.   

;