games

img

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!  

17 வருட தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்து சாதனை படைத்துள்ளார்.  

இந்திய-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  

இதில் களமிறங்கிய இந்திய அணியின் ரிஷப் பந்த்-ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடினர். ரிஷப் பந்த் சதம் அடித்தார். ஜடேஜா அரைசதம் விளாசினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஜோ ரூட் பந்து வீச்சில், ரிஷப் பந்த் 111 பந்துகளில் 146 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் அதிரடியாக சதம் அடித்ததன் மூலம் டெஸ்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், 2006 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 78 பந்தில் சதம் அடித்தார்.

1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அசாருதீன் 88 பந்தில் சதம் அடித்து 2வது இடத்தில் உள்ளார். தற்போது 89 பந்தில் சதம் அடித்து ரிஷப் பந்த் 3வது இடத்தில் உள்ளார்.

முன்னதாக இந்தியாவின் விக்கெட் கீப்பர்களில் மகேந்திர சிங் தோனி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் சதமடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஒரு ஆண்டில் இரண்டு சதங்களை அடித்த நான்காவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் பண்ட் படைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் 2 சதமடித்த முதல் விக்கெட் கீப்பராக 24 வயதான ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.

2018 சுற்றுப்பயணத்தின்போது 5வது டெஸ்டில் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;