games

img

விளையாட்டு... ஐபிஎல் இன்னும் 5 நாட்கள்

டபிள்யுபிஎல் கோப்பை யாருக்கு?

இறுதிப்போட்டியில் தில்லி - மும்பை இன்று பலப்பரீட்சை

இந்தியாவில் ஆடவருக்கு ஐபிஎல் என்ற பெயரில் டி-20 லீக் நடத்தப் படுவது போல, இந்திய கிரிக்கெட் வாரி யத்தின் முன்னாள் தலைவர் கங்குலி, தான் பதவியில் இருந்த காலத்தில் மக ளிருக்கும் டி-20 லீக் நடத்த தீவிர முயற்சி செய்து டபிள்யுபிஎல் என்ற பெயரில் மகளிர் டி-20 லீக் திட்டத்தை செயல் படுத்திக் கொடுத்தார்.  திட்டம் வகுத்து கொடுத்தும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது 2 ஆண்டுக்கு பிறகு நடப்பாண்டு மார்ச் 4-ஆம் தேதி டபிள்யுபிஎல் தொடர் தொடங்கியது. கடந்த வாரம் லீக் ஆட்டங் கள் நிறைவு பெற்று தில்லி அணி நேர டியாக இறுதிப்போட்டிக்கும், மும்பை - உத்தரப்பிரதேசம் அணிகள் எலிமி னேட்டர் சுற்றுக்கும் தகுதி பெற்ற நிலை யில், எலிமினேட்டர் ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் அணியை 72 ரன்கள் வித்தியா சத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.  இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தில்லி - மும்பை அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்து கின்றன. முதல் டபிள்யுபிஎல் கோப்பை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிக ளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவ தால் இறுதி ஆட்டம் மிக பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு?

தில்லி அணி பந்துவீச்சிலும், மும்பை அணி பேட்டிங்கி லும் பலமாக உள்ளது. அவ்வளவு தான். மேலும் டபிள்யு பிஎல் தொடர் முதல் சீசன் என்பதால் வேறு யாருக்கு கோப்பை என கருத்துக் கூற முடியாது.

பரிசுத்தொகை 

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு -   ரூ. 6 கோடி
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு -    ரூ. 3 கோடி
3-ஆம் இடம் பிடித்த உத்தரப்பிரதேசம் அணி - ரூ. 1 கோடி

மியாமி ஓபன் டென்னிஸ் கார்சியா அவுட்

அமெரிக்காவின் புளோரிடா நடைபெற்று  வரும் டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான மியாமி ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆம் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டின் கார்சியா தரவரிசையில் இல்லாத ருமேனியா வீராங்கனை கிறிஸ்டியாவிடம் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். இதே பிரிவில் பெலாரஸின் சபலென்கா, சுவிஸின் பென்கிக், செக்குடியாசின் கிவிடோவா, அமெரிக்காவின் கீஸ், குரோஷியாவின் வெக்கிச் ஆகியோர் 2-ஆம் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஜுவரேவ் வெளியேற்றம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரும், ஜெர்மனி நாட்டவருமான ஜுவரேவ் 6-0, 6-4 என்ற செட் கணக்கில்  தரவரிசையில் இல்லாத ஜப்பானின் டேனியலிடம் வீழ்ந்தார். இதே பிரிவு 2-ஆம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் அல்காரஸ், நார்வேயின் ரூத், பல்கேரியாவின் டிமிட்ரோவ், அமெரிக்காவின் பிரிட்ஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

 

;