டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலபரீட்ச்சை நடத்துகின்றன.
இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெர் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், 8ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நஸ்ஸாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் முடிந்து சில நாட்களே ஆன நிலையில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அசுர பலத்துடன் உலக கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்குகிறது. அதேநேரம், டி20 உலக கோப்பையில் 9ஆவது முறையாக களம் காணும் அயர்லாந்து அணி, ஒரே ஒரு முறை மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கை துவங்கும் நோக்கில் களமிறங்க உள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்பட்டாலும், பெரிய தொடர்களில் அயர்லாந்து அணி பல அணிகளுக்கு சவாலாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.