games

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் இங்கிலாந்து அணி எப்படி?

2010-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணி வரவிருக்கும் 8-வது சீசன் உலகக்கோப்பையில் குறை என்ற வார்த்தை சொல்ல முடியாத அளவிற்கு வீரர்களை தேர்வு செய்து மிரட்டல் பலத்துடன் களமிறங்குகிறது. பேட்டிங் பிரிவுகளில் எப்பொழுதும் போல சூப்பர் டாப் ஆர்டர்களுடன் களமிறங்கவுள்ள இங்கிலாந்து அணி, பந்துவீச்சில் அதை விட மிரட்டல் பலத்துடன் வீரர்களை தேர்வு செய்துள்ளது.  இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மொயின் அலி (ஸ்பின்), பென் ஸ்டோக்ஸ் (வேகம்), சாம் கர்ரன் (வேகம்), டேவிட் வில்லே (வேகம்), கிறிஸ் வோக்ஸ் (வேகம்) ஆகியோர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய கிரிக்கெட் உலகின் அபாயகரமான ஆல்ரவுண்டர்கள் அணியில் உள்ளனர். இதுபோக அனுபவ பந்துவீச்சாளர்களான கிறிஸ் ஜோர்டன் (வேகம்) , அடில் ரசித் (ஸ்பின்), மார்க் வுட் (வேகம்)  மற்றும் டாப்லே (வேகம்) ஆகியோரும் பந்துவீச்சில் மிரட்ட தயாராக உள்ளனர்.

இதில் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் 10 வீரர்களை பேட்டிங் செய்ய வைத்து 8 வீரர்களை பந்து வீசவைக்கும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு உள்ளது. ஆனால் ஒரே ஒரு சிக்கல் உள்ளது. ஆடும் லெவனுக்கு வீரர்களை தேர்வு செய்வதில் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களில் அனைவரும் நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள். இதில் பார்ம் பிரச்சனையில் உள்ளவர்களை தரம் பிரிக்கப்பட்டாலும் யாரை ஆடும் லெவனில் களமிறக்குவது?, யாரை நீக்குவது? என மிகப்பெரிய சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்களை அணியிலிருந்து நீக்கினால் அணியில் பிரச்சனை, குழப்பம் அதிகம் உருவாகும். இந்த மாதிரி விவகாரங்களை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை நாட்டு நிர்வாகங்கள் எளிதாக சமாளித்து விடும். ஆனால் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அணி நிர்வாகத்திற்குள் பிரச்சனை உருவாகும். இந்த ஒரு பிரச்சனையை இங்கிலாந்து அணி சமாளித்துவிட்டால் கோப்பையை எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.

வீரர்கள் விபரம் : ஜோஸ் பட்லர் (கேப்டன்), பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஹாரி புரூக், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலன், அடில் ரஷித், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். (மாற்று வீரர்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை)