games

img

சையத் முஸ்தாக் அலி கோப்பை இறுதிப்போட்டி : கர்நாடக அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த தமிழக அணி  

தமிழகத்துக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி இறுதிச்சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது.  

சையத் முஸ்தாக் அலி இறுதிப் போட்டியில் இன்று தமிழ்நாடு, கர்நாடகா அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து. ஆரம்பம் முதல் தமிழகச் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இறுதியில் கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து 152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணிக்குக் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடி வீரர் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து தமிழகத்தை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், இதுவரை மூன்று முறையும் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழக அணி வென்றுள்ளது. 

காலிறுதிப் போட்டியில் தமிழக அணி கேரளா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றில் ஐதராபாத் அணியையும், இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியையும் வீழ்த்தி தமிழகம் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.  

;