ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரு கிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் திங்க ளன்று தொடங்கியது. கிரிக்கெட் உல கின் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி யாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்திருந்தது. செவ்வாயன்று தொடர்ந்து 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், தொடக்க வீரர் வார்னர் அபாரமாக விளையாடி சத மடித்தார். வார்னருடன் ஜோடி சேர்ந்து அசத்தலாக விளையாடிய ஸ்மித் சதத்தை நெருங்கிய பொழுது 85 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்தலாக விளை யாடிய வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். வார்னருக்கு இது 100வது டெஸ்ட் ஆட்டமாகும். 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். இதற்கு முன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளார். இரட்டை சதம் அடித்த பின் வார்னர் காயம் காரணமாக “ரிட்ட யர்ட் ஹர்ட்” மூலம் வெளியேறினார். 2-ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னி லையுடன் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இன்றைய ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா
(2-வது டெஸ்ட், 3-வது நாள்)
நேரம் : காலை 5:00 மணி
இடம் : மெல்போர்ன்
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ்
பாகிஸ்தான் - நியூசிலாந்து
(முதல் டெஸ்ட், 3-வது நாள்)
நேரம் : காலை 10:30 மணி
இடம் : கராச்சி
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ்
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 2-வது நாளின் 3-வது சீசனில் நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் விக்., இழப்பின்றி 143 ரன்கள் எடுத்திருந்தது.