games

img

தென் ஆப்பிரிக்க வீரர் பர்ஹான் பெஹர்டின் ஓய்வு

2013 முதல் 2018 வரை தென் ஆப்பிரிக்க அணியின் மிக முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான பர்ஹான் பெஹர்டின் (39) அனைத்து வகை  கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓரளவு அதிரடியாக விளையாடும் பெஹர்டின் 5 ஆண்டுகளில் 38 டி-20 போட்டிகளில் விளையாடி 518 ரன்களும், 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,074 ரன்களும் விளாசியுள்ளார். இதுபோக ஒரு சீசனில் (2017- இலங்கைக்கு எதிரான டி20 தொடரில்) கேப்டன் பதவியையும் பெற்று அணியை வழிநடத்தியுள்ள பர்ஹான் பெஹர்டின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.