games

img

ஐசிசி 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு 

ஐசிசி 2021 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

சமீபத்தில் மகளிர் கிரிக்கெட்டின் இந்த வருடத்திற்கான சிறந்த டி20 அணியை ஐசிசி அறிவித்தது. 11 வீராங்கனைகள் அடங்கிய இந்த அணியில் இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே தேர்வாகியிருந்தார். இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக மந்தனாவின் பெயரை அறிவித்துள்ளது. 

கடந்த வருடன் ஸ்மிருதி மந்தனா, 22 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 5 அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தார். இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு சிறந்த வீராங்கனையாகவும் சிறந்த ஒருநாள் வீராங்கனையாகவும் தேர்வானார். இதன்மூலம் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெரிக்கு அடுத்ததாகச் சிறந்த வீராங்கனைக்கான விருதை இருமுறை வென்ற வீராங்கனை என்கிற பெருமையையும் இவர் அடைந்துள்ளார். 

;