8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் வெள்ளியன்று தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், அயர்லாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் கேப்டவுன், ஜார்ஜ் பார்க், பார்ல் ஆகிய 3 மைதானங்களில் நடைபெறுகிறது. 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான் உள்ளிட்ட வலு வான அணிகள் உள்ள “குரூப் பி” பிரிவில் உள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் (பிப்., 12-ஆம் தேதி) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
முதல் ஆட்டம்
தென் ஆப்பிரிக்கா - இலங்கை
நேரம் : இரவு 10:30 மணி
இடம் : நியூலாண்ட்ஸ், கேப்டவுன்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1