சபலென்கா சாம்பியன்
ஸ்பெயின் நாட்டின் முக்கிய டென்னிஸ் தொடரான மாட்ரிட் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையும், போலந்து நட்சத்திரமுமான ஸ்வியாடெக், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை எலினா சபலென்காவை எதிர்கொண்டார். இரு வரும் அதிரடி வீராங்கனைகள் என்பதால் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஐபிஎல் 2023
தமிழ்நாட்டில் ஐபிஎல்
சென்னை - தில்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்கு இன்று முதல் டிக்கெட் விற்பனை
மே 10 அன்று நடைபெறும் 55-வது ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை - தில்லி அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை திங்களன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. கவுன்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுன்ட்டரிலும், பேடிஎம் மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுன்ட்டர்களும்.. விலையும்..
சி,டி,இ (கீழே) ரூ.1500
ஐ,ஜே,கே (மேலே) ரூ.2000
ஐ,ஜே,கே (கீழே) ரூ.2500
சி,டி,இ (மேலே) ரூ.3000
டிஎம்கே(மொட்டை மாடி) ரூ.5000
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்குவதற்காக முதல் நாள் நள்ளிரவில் குவிந்துள்ள ரசிகர்கள். சுற்றுலா செல்வது போல உணவு, படுக்கை உபகரணங்களுடன் முகாமிட்டுள்ள ரசிகர்கள்.
பெண்களுக்கு தனி வரிசை
சென்னை அணி தமிழ்நாடு மாநில அந்தஸ்து பெற்ற அணியை போன்று இருப்பதால், தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது சென்னை அணியின் ஆட்டத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்க சென்னை சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க முதல்நாளே முகாமிட்டு வருகின்றனர். இளைஞர்கள் அதிகம் இருப்பதால் சில சமயங்களில் மோதல் அரங்கேறுகிறது. இதனால் கடந்த போட்டியின் போதே பெண்களுக்கு டிக்கெட் வாங்க தனிவரிசை வழங்கப்பட்ட நிலையில், திங்களன்று நடைபெறும் போட்டியிலும் பெண்களுக்கு தனிவரிசை அமைக்கப் பட்டுள்ளது.
இன்றைய ஆட்டங்கள்
கொல்கத்தா - தில்லி
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : ஈடன் கார்டன், கொல்கத்தா
சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா
ரேஸிங்...
புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடம்
1. குஜராத் - 14 (7 வெற்றி, 3 தோல்வி)
2.சென்னை - 13 (6 வெற்றி, 4 தோல்வி, 1 டை)
3.லக்னோ - 11 (5 வெற்றி, 4 தோல்வி, 1 டை)
4.ராஜஸ்தான் - 10 (5 வெற்றி, 5 தோல்வி)
அதிக ரன்கள் (ஆரஞ்சு தொப்பி) டு பிளசிஸ் (பெங்களூரு) - 511 ரன்கள் (10 ஆட்டம்)
அதிக விக்கெட்டுகள் (பரப்பிள் தொப்பி) துஷார் பாண்டே (சென்னை) - 19 விக்கெட்டுகள் (11 ஆட்டம்)
(முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். புள்ளிபட்டியல் : ஞாயிறன்று மாலை 4 மணி நிலவரம்)