games

img

கோலியிடமிருந்து ஒருநாள் கேப்டன் பதவி பறிப்பு  

விராட் கோலியிடமிருந்து ஒருநாள் கேப்டன் பதவியும், ரஹானேயிடமிருந்து துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.  

வரும் 17 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படும் இந்திய அணி 3 டெஸ்ட்,  3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடரை பின்னர் நடத்துவது குறித்து இருநாட்டு வாரியங்களும் முடிவு செய்யும். ‘  இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும், டெஸ்ட் துணைக் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.  

டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக ரோஹித் சர்மா  நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் 2 விதமான வெள்ளைப்பந்து போட்டிகளுக்கு 2 விதமான கேப்டன் இருக்க முடியாது என்பதால், கோலியிடம் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவி மட்டும் வழங்கப்பட்டு, அவரிடம் இருந்து ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  

அதனை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் நீண்டகாலமாகவே ஃபார்ம்இன்றி தவித்து வரும் ரஹானே அணியிலிருந்து நீக்கப்படலாம் அல்லது துணைக் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரஹானேயின் பேட்டிங் சராசரி 21 ரன்களைத் தாண்டவில்லை. ஆனாலும் தென் ஆப்பிரிக்கத் தொடரில் இறுதியாக வாய்ப்பளிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

;