games

img

விளையாட்டு செய்திகள்

ராஜ்கோட் டெஸ்ட்
ரோகித் சர்மா, ஜடேஜா சதம் : இந்தியா அபார துவக்கம்

5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இங்கி லாந்து கிரிக்கெட் அணி இந்தியா விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடி வில் பதிலடி வெற்றியுடன் இரு அணி களும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோ ட்டில் வியாழனன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து கள மிறங்கியது. ஜெய்ஸ்வால் (10), கில் (0), ரஜாத் பட்டிதார் (5) சொதப்ப லான ஆட்டத்துடன் விரைவாகவே பெவிலியன் திரும்ப, விக்கெட் சரிவை கட்டுப்படுத்த பின்வரிசை வீரரான  ஆல்ரவுண்டர் ஜடேஜாவை களமிறக்கி புதிய வியூகம் வகுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. 

விக்கெட் சரிவை கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான பொறுப்பை துடிப்பாக எதிர்கொண்ட ஜடேஜா நிதான வேகத்தில் ரன் குவிக்க ஆரம்பித்தார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடி மூலம் சதமடித்து அசத்தினார். மேற் கொண்டு 31 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந் தார். 

ரோகித் சர்மா ஆட்டமிழந்தவுடன் அதிரடியாக விளையாட ஆரம்பித்த ஜடேஜாவும் சதமடித்த நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 86 ஓவர்களில் 5 விக் கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா(110), குல்தீப் (1) ஆகியோர் களத்தில் உள்ளனர்.  இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

வெள்ளியன்று தொடர்ந்து 2-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

மும்பை அணி நிர்வாகத்திற்கு மட்டையால் பதிலடி கொடுத்த ரோகித் சர்மா

வரவிருக்கும் 17-ஆவது ஐபிஎல்  சீசனில் மும்பை அணி கேப்ட னாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு,  ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள் ளார். 5 முறை கோப்பை வென்று கொடுத்து மும்பை அணிக்காக கடின மாக உழைத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவ காரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரோகித் சர்மாவிற்காக லட்ச க்கணக்கான ரசிகர்கள் மும்பை அணிக் கான ஆதரவை வாபஸ் (அன்பாலோ ஆப் சோசியல் மீடியா) வாங்கினர். 

தொடர்ந்து மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர்,”ரோகித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல் பட்டாலும், ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அதனால்தான் அவ ரை நீக்கினோம்” என எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார். இதற்கு ரோகித் சர்மா மனைவி ரித்திகா மும்பை அணியை நேரடியாக விமர்சித் தார். மேலும் தேசிய அணியின் கேப்ட னை விமர்சிக்க சாதாரண ஐபிஎல் பயிற்சியாளர்களுக்கு உரிமை இல்லை என இந்திய கிரிக்கெட் உல கமே ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கியது.

ஆனால் 5 முறை தங்களது அணிக் காக கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவின் விமர்சன நிலை குறித்து மும்பை அணி நிர்வாகம் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது. இந்த விவ காரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மார்க் பவுச்சர் கருத்து மற்றும் மும்பை அணியின் நிர்வாக நட வடிக்கைக்கு தனது மட்டை மூலம் (ராஜ்கோட் டெஸ்டில் சதம்) பதிலடிக் கொடுத்துள்ளார் ரோகித் சர்மா. ரோகித் சர்மாவின் சதத்தை வைத்து மும்பை அணியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்து வருகின்றனர்.