கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண் டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸி பிரான்ஸ் நாட்டு கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர் மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்பெயின் கிளப் அணியான பார்சிலோனா அணியிலிருந்து விலகி, ரூ.849 கோடி ஒப்பந்தத்தில் பிஎஸ்ஜி அணியில் இணைந்தார். பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில், மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தம் செய்ய பல்வேறு நிபந்தனைகளை விதித்தது பிஎஸ்ஜி நிர்வாகம். அதில் முக்கிய நிபந்தனையான சம்பளத்தை ரூ.334 கோடி (ஆண்டுக்கு) குறைக்க கூறியது. இதனை மெஸ்ஸி ஏற்க மறுத்து ஒப்பந்த புதுப்பிப்பு வாய்ப்பை நீடிக்க விரும்பவில்லை என கூறி யுள்ளார். (வெளிப்படையான தகவல் வெளியாகவில்லை). பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் ஏறக்குறைய முடி வுக்கு வந்துள்ள நிலையில், மெஸ்ஸியின் தந்தை பார்சி லோனா அணியுடனான பேச்சுவார்த்தையை முன்னெ டுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக மெஸ்ஸி எவ்வித கருத்தும் அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழிவாங்கும் நடவடிக்கையா?
கத்தார் உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் வென்றது. மெஸ்ஸி விளையாடும் கிளப் அணியான பிஎஸ்ஜி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதால் அவரது ஊதிய ஒப்பந்த நெறிமுறைகளில் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட உலகக்கோப்பை யில் ஏற்பட்ட தோல்வியை சரிக்கட்ட பிஎஸ்ஜி அணி மூலம் மெஸ்ஸியை பழிவாங்கும் நோக்கத்தில் பிரான்ஸ் நாடு களமிறங்கி யுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய டபிள்யுபிஎல் ஆட்டங்கள்
பெங்களூரு - தில்லி
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : பிராபோர்ன் மைதானம்
உத்தரப்பிரதேசம் - குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
இரண்டு மைதானங்கள் மும்பை வட்டத்தில் உள்ளது.
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18 (பிபா உலகக்கோப்பை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி),
ஜியோ சினிமாவில் (ஓடிடி - இலவசம்) காணலாம்.