games

img

காத்திருக்கிறது கத்தார்...

வெயிலின் கொடுமையை தாங்குவதற்காக போட்டியின் காலத்தை மாற்றிய கத்தார்...

வழக்கமாக உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் ஜூலை மாதங்களில்தான் நடைபெறும். கத்தாரில் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டி நடைபெறும் நவம்பர் காலக்கட்டத்தில் வெயில் அடித்தால் அதனை தாங்குவதற்கு குளிர்சாதன வசதிகளுடன் அதிநவீன விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 

குளிர்சாதன வசதிகளுடன் அதிநவீன விளையாட்டு அரங்குகள், அதி விரைவு நெடுஞ்சாலைகள், ஒவ்வொரு மைதா னங்களையும் இணைக்கும் விதத்தில் 76 கி.மீ. நீளத்தில் மெட்ரோ ரயில், டிராம், விண்ணைத் தொட்டுநிற்கும் புதிய கட்டிடங்கள், நான்கு சதுர கி.மீட்டர் சுற்றளவில் உருவாக்கப்பட்டுள்ள பியர்ல் (முத்து) என்ற செயற்கைத் தீவு, புதிய துறைமுகம், நவீன வசதிகளுடன் விரிவாக்கப் பட்ட தோஹா விமான நிலையம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இவையெல்லாம் எதிர்வரும் நவம்பர் 20 அன்று துவங்கவிருக்கும் உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான உல கக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக கத்தார் உருவாக்கியுள்ளவைகளாகும். 92 வருட உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான மற்றும் அதிசயிக்கத்தக்க வகையிலான ஏற்பாடுகளை கத்தார் நாடு செய்து முடித்துள்ளது.  

2022 நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை 22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. மொத்தம் 32 அணிகள், 64 போட்டிகள். மொத்தம் 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி அல்கோர் நகரில் அமைந்துள்ள அல்பெய்து மைதானத்திலும், இறுதிப் போட்டி லுஸைன் மைதானத்திலும் நடைபெறும். உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை  கத்தார் 2010ஆம் ஆண்டு பெற்றது. அன்று முதல் போட்டிகளை இதுவரை இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக நடத்திக் காட்டுவதற்கான அனைத்துப் பணிகளையும் கத்தார் சிறப்பாக செய்து முடித்துள்ளது.  கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தாக இருக்கும். ஒரு அரபு நாட்டில் முதல் உலகக் கோப்பை, ஆசியக் கண்டத்தில் இரண்டாவது  முறை, உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மிகச்சிறிய நாடு போன்ற பிரம்மாண்ட சிறப்பு களை  பெற்று கத்தார் உலகக்கோப்பை  கால்பந்து  போட்டியை நடத்த உள்ளது. 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது இருக்கும். 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகள்  இணைந்து நடத்தவிருக்கும் 23வது உலகக் கோப்பை 48 அணியில் பங்கேற்கும். இதுவரை 8 நாடுகளே உலகக் கோப்பையை வென்றுள்ளன. பிரேசில் அதிகபட்சமாக 5  முறை யும் இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன. உருகுவே, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் 2  முறையும் இங்கிலாந்து, ஸ்பெயின் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

லீக் சுற்று ஆட்டம்

முதல் நாள் ஒரு ஆட்டம் மட்டும். (போட்டி நடத்தும் கத்தார்-ஈக்வடார் ஆகிய நாடுகள் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 9.30 மணிக்கு அல்பெய்த் மைதானத்தில் நடைபெறுகிறது.)  இரண்டாம் நாள்  3 போட்டிகள், தொடர்ந்து டிசம்பர் 2 வரை தினசரி  4 ஆட்டங்கள் (பிற்பகல் 3.30 மாலை 6.30 இரவு 9.30 மற்றும் 12.30) பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், அர்ஜென்டினா ஆகிய நட்சத்திர நாடுகள் பங்கேற்கும் லீக் சுற்று ஆட்டங்கள் 22ஆம் தேதிக்கு மேல் தொடங்கும்.

நாக் அவுட் சுற்று டிசம்பர் 3-6 (இரவு 8.30, நள்ளிரவு 12.30)  காலிறுதி ஆட்டங்கள் 9,10  (இரவு 8.30,  நள்ளிரவு 12.30) அரையிறுதி ஆட்டங்கள் 13,14  ( நள்ளிரவு  12.30) இறுதிப் போட்டி டிசம்பர் 17 ( நள்ளிரவு  12.30)

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக கத்தார் தலைநகர் தோஹாவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட  கவுண்ட் டவுன் தூண்... 

32 அணிகளும் ... பிரிவுகளும்...

குரூப் ‘ஏ’
கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து
குரூப் ‘பி’
இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் ‘சி’
அர்ஜென்டினா, சவூதி அரேபியா, மெக்ஸிகோ, போலந்து
குரூப் ‘டி’
பிரான்ஸ், ஆஸி., டென்மார்க், துனிஷியா
குரூப் ‘இ’ 
ஸ்பெயின், ஜெர்மனி, கோஸ்டாரிகா, ஜப்பான்
குரூப் ‘எஃப்’ 
பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
குரூப் ‘ஜி’
 பிரேசில், செர்பியா, ஸ்விட்சர்லாந்து, கேமரூன்
குரூப் ‘ஹெச்’
போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென்கொரியா

8 மைதானங்கள்...

    மொத்தம் 8 மைதானங்கள். இதில் 6 புதிதாகக் கட்டப்பட்டது. 2 புதுப்பிக்கப் பட்டவை. அனைத்து மைதானங்கள் அதிநவீன வசதிகளுடன்கூடியவை.

  1.  அல்பெய்த் - துவக்க ஆட்டம், அரையிறுதி ஆட்டங்கள்.     இருக்கைகள்: 60,000 பேர்.
  2.  ஹலீபா-லீக் சுற்று, நாக் அவுட், 3ஆம் இடத்திற்கான ஆட்டம். இருக்கைகள்: 40,000 பேர்

     
  3.  அஹம்மது பின்-லீக் சுற்று, நாக் அவுட்,  இருக்கைகள்: 40,000 பேர்
  4.  அல் ஜனூப்-லீக் சுற்று, நாக் அவுட், இருக்கைகள் : 40,000 பேர்
  5.  கத்தார் பவுண்டேசன் - லீக் சுற்று, நாக் அவுட், காலிறுதி ஆட்டங்கள்). இருக்கைகள் : 40,000 பேர்.
  6.  ஸ்டேடியம் 974 -லீக் சுற்று, நாக் அவுட், இருக்கைகள் : 40,000 பேர்
  7.  அல் துமாம -லீக் சுற்று, நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள். இருக்கைகள்: 40,000 பேர்
  8.  லுஸைல்-இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 10 ஆட்டங்கள். இருக்கைகள்: 80,000 பேர்

  9.