புரோ கபடி லீக் - 2023
தடுப்பாட்டத்தில் வெற்றி பெற நினைக்கும் புனே
பொதுவாக கபடி விளை யாட்டில் ஒரு அணி ரெய்டு புள்ளிகளை வைத்தே வெற்றியை நிர்ணயிக்க முயலும், தடுப்பாட்டத்தை அணியின் தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தும். இதுதான் கபடி விளை யாட்டின் பொதுவான நடைமுறை. ஆனால் நடப்பு சீசன் புரோ கபடி தொடரில் புனே அணி முற்றிலும் மாறுபட்ட நடைமுறையுடன் விளை யாடி வருகிறது. அதாவது ரெய்டு மூலம் புள்ளிகளை குவிப்பதற்கு பதி லாக தடுப்பாட்டத்தின் மூலம் புள்ளி களை குவிக்க நினைத்து ஆட்டத்தின் நடைமுறையை முற்றிலும் மாற்றி வருகிறது. தனது முதல் லீக் ஆட்டத்தில் புனே அணி ஜெய்ப்பூர் அணியை 37 - 33 புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. புனே அணி தான் வென்ற 37 புள்ளிகளில் 19 புள்ளிகள் ரெய்டு மூலமும், 13 புள்ளிகள் தடுப்பாட்டத்தின் மூலமாக வென்றது. தோராயமாக இந்த ஆட்ட த்தின் 40 நிமிடங்களில் 25 நிமிடங்கள் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த புனே அணி முயற்சித்து, இறுதியில் வெற்றியையும் ருசித்தது. தடுப்பாட்டத்தின் மூலம் வெற்றியை குவிப்பது சிக்கலானது என்றாலும், புனே இம்முறை மூலம் எளிதாக வெற்றி யை வசமாக்கியது. இதற்கு காரணம் கபடி உலகின் முக்கிய ஆல்ரவுண்டர்களாக இருக்கும் அஸ்லாம் முஸ்தபா, முகமதுரெஜா ஷியானே (ஈரான்), அகமத் இனம்தார் ஆகியோர் புனே அணியில் இருப்ப தாலும், இதுபோக ஈரான் நாட்டின் நட்சத்திர தடுப்பாட்ட வீரர் வஹீத் ரெஜாவும் புனே அணியில் உள்ளார். இப்படி பலமான தடுப்பாட்டம் சார்ந்த வீரர்கள் அதிகம் இருப்பதால் தடுப்பாட்டத்தின் மூலமே புனே அணி நடப்பு சீசனில் கண்டிப்பாக நல்ல நிலை யில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
பெங்கால் - ஜெய்ப்பூர்
(10-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
குஜராத் - பாட்னா
(11-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
இரண்டு ஆட்டங்களும் டிரான்ஸ்ஸ்டேடியா மைதானம், அகமதாபாத், குஜராத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்) ஹாட் ஸ்டார் ஓடிடி - சந்தா தொகை இருந்தால் மட்டுமே
சாண்டியாகோ
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி
இன்றுடன் காலிறுதி ஆட்டங்கள் நிறைவு
10-ஆவது சீசன் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று காலிறுதி ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.
கடைசி காலிறுதி ஆட்டம்
ஆஸ்திரேலியா - அர்ஜெண்டினா
நேரம் : அதிகாலை 5 மணிக்கு மேல்
13 முதல் 16-ஆவது இடத்திற்கான ஆட்டம்
ஜிம்பாப்வே - கனடா
நேரம் : மாலை 5:30 மணி
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து
நேரம் : இரவு 7:45 மணி
3 ஆட்டங்களும் : சென்ட்ரோ மைதானம், சாண்டியாகோ சேனல் : எப்ஐஎச் சேனல்