games

img

விளையாட்டு...

பாரா ஒலிம்பிக் 2024 இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி

கடந்த சீசன்களை விட பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும், 17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக்  தொடர்   மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீனா, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பதக்க வேட்டையில் ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றனர்.  இந்நிலையில், திங்களன்று காலை நடைபெற்ற ஆடவர்  குண்டு எறிதல் பிரிவில் (எப்-6) இந்திய வீரர் கதுன்யா 42.2 மீ  குண்டை எறிந்து இரண்டாவது இடத்துடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் பிரேசில் வீரர் பாட்டிஸ்டா (46.86 மீ) தங்கப்பதக்கமும், கிரீஸ் வீரர் ஜோய்னிஸ் (46.86 மீ)  வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. (மாலை 4:30 நிலவரம்).

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜுவரேவ் முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26  அன்று தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடரில் ரவுண்ட் சுற்று  ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திங்களன்று அதிகாலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவ ரேவ், தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் நாகஷிமாவை எதிர் கொண்டார். நாகஷிமா தொடக்கத்தில் அசத்தலாக விளையாடி முதல் செட்டை கைப்பற்றினாலும், இரண்டா வது செட்டில் இருந்து ஜுவரேவின் தாக்குதல் பாணி ஆட்டத்தை நாகஷி மாவால் எதிர்கொள்ள முடியவில்லை. இறுதியில் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் நாகஷிமாவை வீழ்த்தி, ஜுவரேவ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.  மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத் தில் டென்னிஸ் உலகின் முக்கிய நட்சத்திர வீரரான ஜோகோவிச்சை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் பாப்ரி னை 6-4, 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் முன்னணி வீரர் தியாபோ. மெர்டென்ஸ் அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் அதிரடிக்கு பெயர் பெற்றவரும், உல கத் தரவரிசையில் 33ஆவது இடத்தில் இருப்பவருமான பெல்ஜியத்தின் மெர்டென்ஸ், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள பெலாரசின் சபலென் காவை எதிர்கொண்டார்.  சூப்பர் பார்மில் உள்ள  சபலென்கா  6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில்  மெர்டென்ஸை புரட்டியெடுத்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.  அதே போல தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஜெங் 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட்  கணக்கில் தரவரிசையில் 24ஆவது இடத்தில் உள்ள குரோசியாவின் வெக்கிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ரஷ்யா, பெலாரஸ் வீரர் - வீராங்கனைகள் டென்னிஸில் மிரட்டுவது எப்படி?

டென்னிஸ் உலகில் ரஷ்யா, பெலாரஸ் ஆகிய இருநாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகளின் பெயர்களை அறிவித்தாலே மற்ற நாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு சற்று தயக்கம், நடுக்கம் ஏற்படும். காரணம் கட்டுக்கோப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டென்னிஸ் உலகை ரஷ்யா, பெலாரஸ் வீரர் - வீராங்கனைகள் மிரட்டி வருவதுதான். அதிரடி ஆட்டத்திறன் ஒருபக்கம் என்றாலும்,  ரஷ்யா, பெலாரஸ் நட்சத்திரங்கள் சாதிப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது உயரம் தான். ரஷ்யா,  பெலாரஸ் வீரர்-வீராங்கனைகள் சராசரியாக 1.80 மீ உயரத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இதன்காரணமாகவே அவர்கள்  கிரிக்கெட்டை போன்று பவுன்சர் (உயரமான ரிவர்ஸ்)ஷாட்களை அதிரடியாக திருப்பி டென்னிஸ் உலகை மிரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.