games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

பாகிஸ்தான் - வங்கதேசம் இன்று மோதல்

13-ஆவது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெறும் 31-ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நல்ல பலமான அடித்தளத்துடன் இருந்தாலும் இறுதிக்கட்டச் சொதப்பலால் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அடுத்து வரவுள்ள ஆட்டங்களில் தொடர் வெற்றியை ருசித்தால் மட்டுமே அரையிறுதி பற்றி கனவே காண முடியும் என்ற சிக்கலான சூழல் இரு அணிகளுக்கும் உள்ளது. இதனால் 31-ஆவது லீக் ஆட்டத்தில் கட்டாய வெற்றியுடன் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் - வங்கதேசம்
இடம் : ஈடன் கார்டன், 
கொல்கத்தா, மேற்கு வங்கம் 
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)

விமான நிலையம் செல்லத் தயாராகும் இங்கிலாந்து

கிரிக்கெட் விளையாட்டு தோன்றிய நாடும், நடப்பு சாம்பியன் அணியுமான இங்கிலாந்து அணி தற்போது நடைபெற்று வரும்  உலகக்கோப்பை தொடரில் படுமோச மாக விளையாடி வருகிறது.  இதுவரை விளையாடிய 6 ஆட்டங் களில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றியை ருசித்து 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  இங்கிலாந்து அணிக்கு இன்னும் 3 லீக் ஆட்டங்கள் பாக்கி உள்ளன. 3 லீக் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி  வென்றாலும் 8 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.  இந்த 8 புள்ளிகளை குவித்து அரை யிறுதிக்கு இங்கிலாந்து அணியால் முன்னேற முடியாது. காரணம் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை உள்ள அணி மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில், புள்ளிப் பட்டியலில் இந்தியா (12 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்கா (10 புள்ளிகள்), நியூ ஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 8 புள்ளிகளுடன் 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்தில் உள்ளன. ஆஸ்தி ரேலியா, நியூஸிலாந்து அணிகள் தற்பொழுதே 8 புள்ளிகளுடன் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் 3 ஆட்டங்கள் உள்ள நிலையில், ஒரு  ஆட்டத்தில் வென்றால் கூட இரு அணி களும் 10 புள்ளிகளை பெற்றுவிடும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், இங்கிலாந்து அணி 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நெதர்லாந்து அணியை வீழ்த்தலாம், ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது கடினமானது என்பதால் 13-ஆவது சீசன் உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் கதை அவ்வளவுதான்... முடிந்தது.. 

இந்த 5 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு கானல் நீர் தான்

இங்கிலாந்து அணி மட்டுமின்றி பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு கானல் நீரைப் போன்றதுதான். புள்ளிப்பட்டியலில் டாப் 4-இல் இந்தியா ஏற்கெனவே அரையிறுதியை உறுதி செய்துள்ள நிலையில், தென் ஆப்பிரிக்கா வரும் ஆட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றியை ருசித்தால் அந்த அணியும் அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும். 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்தால் மட்டுமே மேற்குறிப்பிட்ட 5 அணிகளுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் 5 அணிகளும் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.