2023-2027 ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலம் வரும் ஞாயிறன்று (ஜூன் 12) நடைபெறவுள்ளது. தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்கான இந்திய, இதர நாடுகளுக்கான ஒளிபரப்பு உரிமை, இணைய வழி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், டிஸ்னி ஸ்டார், சோனி, ஜீ, வியாகாம், அமேசான், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஏலப் போட்டியிலிருந்து அமேசான் விலகி யுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கார ணம் எதுவும் அமேசான் நிறுவனம் வெளிப்படையாக வெளி யிடவில்லை. ஐபிஎல் தொடரின் முதல் 10 வருடங்களுக்கு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதற்கான உரிமையை ரூ. 8,200 கோடிக்குப் பெற்றது. 2017-ல் ஸ்டார் இந்தியா ரூ. 16,347.5 கோடிக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெற்று ஐந்து வருடங்கள் (2018-22) சிறப்பாக ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.