games

img

ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
சமீபத்தில் வங்கதேச அணியை 3-0 என ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது. இதையடுத்து ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 
முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி 3 இடங்கள் சரிந்து 4 ஆம் இடத்தை பிடித்தது. மேலும், கடந்த ஒரு வருடத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வியை தழுவி, தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 4 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. மேலும், 2 ஆம் இடத்தை ஆஸ்திரேலியாவும், 3 ஆம் இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன.
ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது.

;