games

img

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து வீரர்கள் இரட்டை சதம் அடித்து சாதனை

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 86 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் அறிமுக வீரர் கான்வே 136 ரன்களுடனும், ஹென்றி நிகோல்ஸ் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நடைபெற்ற தொடர் ஆட்டத்தில் நிகோலஸ் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் கான்வே அதிரடியாக விளையாடி தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். 

இதன்மூலம் அறிமுக டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய ஏழாவது வீரர் நியூசிலாந்து அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
மேலும் இங்கிலாந்தில் முதல் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்திற்காக விளையாடிய இந்தியாவைச் சேர்ந்த ரஞ்ஜித்சின்ஜி பெற்றிருந்தார். 1896ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் எடுத்ததே அவரின் சாதனையாக இருந்த நிலையில்,  125 வருட சாதனையை  நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வே முறியடித்துள்ளார்.

இறுதியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் நேர முடிவில் அந்த அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

;