டையமண்ட் லீக் தடகளம்
நீரஜ் சோப்ரா தங்கம் வென்று கலக்கல்
தடகள உலகின் முக்கிய தொடரான டைமண்ட் லீக் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தி யுள்ளார். டையமண்ட் லீக் தடகள தொடரில் இந்திய வீரர்-வீராங்கனை கள் இதுவரை தங்கப்பதக்கம் வென்றது கிடையாது. இந்த ஏக்கத்தை நீரஜ் சோப்ரா நிறைவேற்றி, டைமண்ட் லீக் தடகள தொடரில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
மாட்ரிட் டென்னிஸ் கோப்பை யாருக்கு? அல்காரஸ் - ஸ்ட்ரப் இன்று பலப்பரீட்சை
ஸ்பெயின் நாட்டின் முக்கிய டென்னிஸ் தொடரான மாட்ரிட் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், ஸ்பெயின் நட்சத்திரமுமான அல்காரஸ், தரவரிசையில் இல்லாத ஜெர்மனியின் ஸ்ட்ரப்பை எதிர்கொள்கிறார். இருவரும் அதிரடி வீரர்கள் என்பதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி ஞாயிறன்று இரவு 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை டென்னிஸ் டிவி (TENNIS TV) சேனலில் காணலாம்.
ஐபிஎல் - 2023
லக்னோ அணிக்கு இருந்த குறைந்தபட்ச ஆதரவையும் காவு வாங்கிய கம்பீர்
கடந்த வாரம் நிகழ்ந்த கோலி - கம்பீர் மோதல் மிகவும் முக்கியமான, பரபரப்பான சம்பவமாக கிரிக்கெட் உலகில் இன்னும் டிரெண்ட் நிலையில் உள்ளது. முக்கியமாக கோலியின் அதிரடி சண்டையை இந்திய கிரிக்கெட் உலகம் கொண்டாடி வருகிறது. அவருக்கும், அவரது பெங்களூரு அணிக்கான ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், கோலியுடனான மோதல் காரணமாக லக்னோ அணிக்கு இருந்த குறைந்தபட்ச ஆதரவையும் காவு வாங்கியுள்ளார் கம்பீர். காரணம் அன்றைய சண்டை கள நிலவரத்தை நன்கு புரிந்துகொண்ட லக்னோ ரசிகர்கள் கம்பீருக்கு ஆதரவாக பெரியளவில் சமூக வலைத்தளங்களில் எதுவும் செய்யவில்லை. ஆனால் கோலிக்கு ஆதரவாக டுவிட்டர் ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
காணாமல் போகும் லக்னோ ரசிகர்கள்
சென்னை அணிக்கு தமிழ் மொழி, மாநில ஆதரவு, தோனி ரசிகர்கள் என பல்வேறு கிளைமேக்ஸ்களால் பிரம்மாண்ட ஆதரவு அலை உள்ளது. அதே போல மும்பை, பெங்களூரு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு மாநில அளவில் போதுமான ஆதரவு உள்ளது. தில்லி, லக்னோ, மேற்கு வங்கம் ஆகிய அணிகளுக்கு நமது உள்ளூர் அணி என்ற மனநிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் வெறுமென போட்டியை பார்த்து செல்வார்கள். எனினும் தில்லி, லக்னோ, மேற்கு வங்கம் அணிகளுக்கு 20 முதல் 30% முரட்டு ரசிகர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலையில், லக்னோ அணிக்கு இருந்த 30% ரசிகர்களின் ஆதரவை அந்த அணியின் ஆலோசகரும், பாஜக எம்பியு மான கம்பீர் பறித்துள்ளார். கோலியுடனான சிறுபிள்ளைத்தனமான மோதலால் கடுப்படைந்து கம்பீர் மீதான கோபத்தை ஒட்டுமொத்தமாக லக்னோ அணி மீது காண்பித்துள்ளனர் ரசிகர்கள். இதற்கு ஆதாரம் சமீபத்தில் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் 10% லக்னோ ரசிகர்கள் கூட மைதானத்தில் இல்லை. சென்னை ரசிகர்கள் அதிகம் இருந்தனர். 30% இருக்கைகள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்கள்
குஜராத் - லக்னோ
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
நேரம் : மதியம் 3:30 மணி
ராஜஸ்தான் - ஹைதராபாத்
இடம் : சவாய் மைதானம், ஜெய்ப்பூர்
நேரம் : இரவு 7:30 மணி
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)