games

img

விளையாட்டு...

மியாமி ஓபன் டென்னிஸ் : சபலென்கா அபாரம்

அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான மியாமி ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆம் சுற்று  ஆட்டத்தில், உலக தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள மேரியை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனைகள் கேர்ஜிசிகோவா, கிவிடோவா ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ரூத் அவுட்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் நார்வே நாட்டவரான காஸ்பர் ரூத், தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் போட்டிக்கிடம் 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார்.  உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் நட்சத்திரம் அல்காரஸ், இத்தாலியின் சின்னர், பின்லாந்தின் எமில் ஆகியோர்  4வது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

டோட்டன்ஹாம் அணியில் இருந்து வெளியேறுகிறார் கான்டே

கால்பந்து உலகின் முன்னணி வீரரும், இத்தாலி நாட்டின் முன்னாள் நடுகள வீரருமான அன்டோனியோ கான்டே (53), 2021-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் முக்கிய கிளப் அணிகளில் ஒன்றான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். கடந்த 16 மாதங்களாக அணியை திறம்பட வழிநடத்திய நிலையில், என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அன்டோனியோ கான்டே. இந்நிலையில் துணை பயிற்சியாளராக இருக்கும் கிறிஸ்டியனை புதிய பயிற்சியாளராக அறிவித்துள்ளது டோட்டன்ஹாம் அணி.

கிரிக்கெட் உலகை மிரட்டிய செஞ்சூரியன் மைதானம்

ஒரே டி-20 போட்டியில் 517 ரன்கள் குவிப்பு எப்படி?

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது.  முதல் டி-20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் சார்லஸ் (118) சதத்தின் உதவியால் 5 விக்., இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது. 120 பந்துகளில் 259 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி டி காக் (100) சதத்தின் உதவியால் 18.5 ஓவர்களில் 4 விக்., இழப்பிற்கு வெற்றி இலக்கை (259) எளிதாக எட்டியது.  ஒரு டி-20 போட்டியில் 233 பந்துகளில் 517 ரன்கள் (இரு இன்னிங்சில்) குவிக்கப்பட்டதால் கிரிக்கெட் உலகமே இந்த போட்டியின் முடிவை கேட்டு வாய டைத்து நின்றது. சாதாரண உள்ளூர் டி-20 லீக் ஆட்டங்களில் இதுபோன்று நடக்கலாம். ஆனால் சர்வதேச ஆட்டங்களில் இதுபோன்று நடக்கும் சம்பவம் மிக அரிதானது.  ஏற்கெனவே கடந்த 2006-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 434  ரன்களை தென் ஆப்பிரிக்கா விரட்டிப் பிடித்து வரலாறு படைத்த நிலையில், மீண்டும் டி-20 போட்டியில் எட்ட முடியாத இலக்கை பிரம்மாண்டமாக எட்டி வர லாறு படைத்துள்ளது தென்ஆப்பிரிக்கா.

வரலாற்று நிகழ்வுக்கு காரணம்?

போட்டி நடைபெற்ற செஞ்சூரியன் (தென் ஆப்பிரிக்கா) சூப்பர் ஸ்ப்போர்ட் பார்க் மைதானத்தின் பவுண்டரி லென்த் 80 மீட்டருக்கு குறைவாக உள்ள சிறிய மைதானம் ஆகும். சாதாரணமாக தூக்கும் பந்துகள் எளிதாக சிக்ஸர், பவுண்டரிக்கு பறக்கும். இதனால்தான் மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரன் மழை பொழிந்தனர். மேலும் பந்துவீச்சு முற்றி லும் எடுபடவில்லை. திட்டமிட்டு மாற்றி மாற்றி பந்து வீசினாலும், பந்து ஷார்ட் பிட்சாகவே எகிறியது. மட்டமான பிட்ச் மற்றும் குறைவான பவுண்டரி லென்த் கொண்ட செஞ்சூரியன் மைதானம் வர லாற்று நிகழ்வில் சிக்கியது.
 


 

;