games

img

விளையாட்டு... மியாமி ஓபன் டென்னிஸ் இறுதியில் ரைபகினா

மியாமி ஓபன் டென்னிஸ் இறுதியில் ரைபகினா

அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான மியாமி ஓபன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரை யிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-ஆம் இடத்தில்  உள்ள கஜகஸ்தானின் ரைபகினா 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ரைபகினாவை விட பெகுலா அனு பவத்திலும், அதிரடியிலும் பலம் வாய்ந்தவர் என்றாலும் மிக எளிதாக பெகுலாவை வீழ்த்தி டென்னிஸ் உல கிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் ரைபகினா. அல்காரஸ் மிரட்டல் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ் அமெரிக்காவின் பிரிட்ஜை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் ரஷ்யாவின் காச்சாநோவ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ரஷ்ய, பெலாரஸ் டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் நடுநிலையாக விளையாடலாம்

சர்வதேச டேபிள் டென்னிஸ் அறிவிப்பு

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா அதன் நட்பு நாடான  பெலாரஸ் நாடுகள் பொருளாதார தடை  உட்பட பல்வேறு தடைகளுடன் சர்வ தேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க தனி தடை உத்தரவுகளை யும் விதிக்கப்பட்டது. இந்த தடையை மற்ற விளையாட்டு பிரிவுகள் ஒரு விளையாட்டு விதியை போன்று கடந்த ஓராண்டாக கடைபிடித்து வரும் நிலை யில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் மட்டும் தடையை கண்டுகொள்ளாமல் நாடுகளின் பெயர்கள் கொடிகளை புள்ளிப்பட்டியலில் இருந்து நீக்கி,  சாதாரண டென்னிஸ் வீரர்- வீராங் கனைகள் என விளையாட அனு மதித்து வருகிறது.  இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி ரஷ்ய,  பெலாரஸ் வீரர் - வீராங்கனைகள் நடு நிலையாக சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிப்பதாக சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.  இதற்கான பரிந்துரையை கடந்த செவ்வாயன்று சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வழங்கிய நிலையில், சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மூலம் அனுமதி வழங்கியது.  வரவிருக்கும் பிரான்ஸ் ஒலிம்பிக் தொடரில் நடுநிலையாக ரஷ்ய, பெலாரஸ் வீரர் - வீராங்கனைகள் நடு நிலையாக பாஸ்போர்ட் அனுமதி யுடன் பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சமீபத்தில் அறி வித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. (சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சுவிஸ் நாட்டின் லொசன்னே நகரில் உள்ளது)

இன்றைய 
ஐபிஎல் ஆட்டங்கள்

பஞ்சாப் - கொல்கத்தா
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : பிந்த்ரா மைதானம், மொஹாலி

லக்னோ - தில்லி
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : எகனா மைதானம், லக்னோ

சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா

;