games

img

விளையாட்டு...

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கால்பந்து உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான ஐரோப் பிய கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பி யன்ஸ் லீக் தொடரின் 68-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.  இங்கிலாந்து கிளப் அணியான மான் செஸ்டர் சிட்டி ஜெர்மனி கிளப் அணி யான பேயர்ன் மூனிச் அணியை 4-1 (2 லெக் சேர்த்து) என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி கிளப் அணியான இன்டர்மிலன் 5-3 (2 லெக் சேர்த்து) என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் கிளப் அணியான பென்பிகா அணியை வீழ்த்தி அரையிறு திக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டங்கள் மே மாதம் 2-வது வாரத்தில் நடைபெறுகிறது. 

ஐபிஎல் - 2023

4-வது வெற்றியை ருசிக்குமா சென்னை?

ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கோப்பை வெல்லும் அணியாக கரு தப்படும் சென்னை நடப்பு சீசனில் அதே பலத்துடன் களமிறங்கி மிரட்டி வருகிறது. இதுவரை 5 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் (வியாழனன்று மதியம் நிலவரம்) உள்ளது.  இந்நிலையில் வெள்ளியன்று சென் னையில் நடைபெறும் தனது 6-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப் பில் இரு அணிகளும் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டம்

சென்னை - ஹைதராபாத்
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
நேரம் :  இரவு 7:30 மணி

சென்னை வீரர் மொயின் அலிக்கு மட்டும் எஸ்என்ஜே லோகோவிற்கு விலக்கு

தொலைக்காட்சி ஒளிபரப்பு விளம்பரம், மைதான அரங்கு விளம்பரம், வீரர்கள் ஜெர்சி விளம்பரம், ஸ்கோர் போர்டு விளம்பரம், பரிசு வழங்குவதில் ஸ்பான்சர் விளம்பரம் என பல்வேறு விளம்பரங்களால் ஜொ லிப்பதால் ஐபிஎல் தொடரை “கிரிக்கெட் விளையாட்டு” என்பதை விட “விளம்பர விளையாட்டு” எனக்  கூறலாம். அந்த அளவுக்கு பணம் கொழிக்கும் விளை யாட்டாக மாறிவிட்டது. இந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், இந்த “விளம்பர விளையாட்டில்” ஒரே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது யாதெனில் சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மொயின் அலியின் (இங்கி லாந்து வீரர்) ஜெர்சியில் எஸ்என்ஜே (SNJ - சென்னை நிறுவனம்) நிறுவ னத்தின் லோகோ இருக்காது. எஸ்என்ஜே ஒரு மதுபான நிறுவனம் ஆகும். மொயின் அலி ஒரு இஸ்லாமிய வீரர் என்பதால், மதுபான விவகாரத்தில் இஸ்லா மியர்களுக்கு தனி தடை உத்தரவு உள்ளது. இதை சென்னை அணி நிறு வனத்திடம் எடுத்துக்கூறினார் மொயின் அலி. சென்னை அணி நிர்வாகமும் எஸ்என்ஜே நிறுவனத்திடம் பேசி மொயின் அலிக்கு மட்டும் விலக்கு வாங்கி, தனி ஜெர்சி அளித்துள்ளது. இது  கடந்த கால நிகழ்வு என்றாலும் தற்போது முழுமையாக வெளிச்சத்திற்கு வந்துள் ளது. மொயின் அலிக்கு விலக்கு அளித்த விவகாரத்தில் சமூகவலைதளங்களில் சென்னை அணி நிர்வாகத்திற்கும், எஸ்என்ஜே நிர்வாகத்திற்கும் பாராட்டுக் கள் குவிகிறது.

நோன்பிற்காக மொயின் அலிக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் சென்னை அணி நிர்வாகம்

வரும் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் ரம்ஜான்  பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒருமாத காலம் குறிப்பிட்ட நேரம் மட்டும் இஸ்லாமிய மக்கள் நோன்பு (விரதம்) இருந்து ரம்ஜான் பண்டி கையை கொண்டாடுவார்கள். சென்னை அணியில் இருக்கும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி இஸ்லா மியர் என்பதால் அவர் நாள்தோறும் நோன்பு கடை பிடித்து பயிற்சி மற்றும் போட்டிக்கு செல்கிறார். மொயின் அலியின் நோன்பு நிகழ்விற்காக சென்னை அணி தினமும் அவருக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. போட்டி தினம் என்றாலும், போட்டி நடைபெறும் மைதானத் திலேயே உதவி பயிற்சியாளர், வீரர்கள் மூலம் யாரை யாவது ஒருவரை அனுப்பி மொயின் அலியின் நோன் பிற்கு உதவி செய்கிறது சென்னை அணி நிர்வாகம்.