சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) மாதம்தோறும் சிறந்த கிரிக் கெட் வீரர், வீராங்கனை பட்டி யலை வெளியிடுவது வழக் கம். அதன்படி ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல் பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலை ஐசிசி வெளி யிட்டுள்ளது. சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். சமீபத்தில் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 276 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியதால் ஐசிசி கீகனை தேர்வு செய்துள்ளது. சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தின் ஹீதர் நைட் தேர்வு செய்யப் பட்டார். இதில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 168 ரன்கள் விளாசியதால் ஹீதர் நைட்டை ஐசிசி தேர்வு செய்துள்ளது.