வீரர்களை வைத்து பங்குச்சந்தை விளையாட்டு சர்ச்சையை கிளப்பும் ஐபிஎல் அணிகள்
விளையாட்டு உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 17-ஆவது சீசன் அடுத்தாண்டு (2024) மார்ச் - ஏப்ரல் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் வெளியேற்றம், வீரர்கள் பரிமாற்றம் என மூன்று நிகழ்வு கள் திங்களன்று முழுமையாக நிறைவு பெற்றன. இதனை தொடர்ந்து வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் வீரர்கள் பரிமாற்றம் ஏதோ வணிக பங்குச்சந்தை விளையாட்டுப் போல அரங்கேறி வருகிறது. அதாவது எங்கள் அணியில் உள்ள ஒரு வீரரை இவ்வளவு தொகையில் நீங்கள் வைத்து கொண்டு, உங்கள் அணியில் உள்ள ஒரு வீரரை தாருங்கள் என வணிக விளையாட்டு அரங்கேறி வரு கிறது. எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை மும்பை பரி மாற்றம் முறையில் வாங்கியுள்ளது. இதற்கு பதிலாக மும்பை அணி ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை பெங்களூரு அணிக்கு விற்பனைக்கு கேட்டு பரிமாற்றம் செய்தது. இதுபோன்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறியுள்ளன. இந்த விவகாரம் விளையாட்டு உல கில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. பேரம் பேசுவதற்கு வீரர்கள் என்ன வணிகப்பொருளா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் ஆசை யில் பணத்திற்காக வீரர்களை ஆண்டு தோறும் வேறு அணிக்கு அனுப்பு வதும், மீண்டும் அவரை வாங்குவதும் என விரும்பத்தகாத செயல்களால் கிரிக்கெட் விளையாட்டின் மாண்பு ஊசல் ஆடிவருகிறது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி குறித்து ஆலோசனை கூட இல்லை
ஐபிஎல் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்கும் நிலை யில், பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் அனுமதி இல்லா சூழல் உள்ளது. எல்லைப்பிரச்சனையால் இருநாட்டு அரசுகளுக்கும் இடையேயான மோதலால் ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்களுக்கு 2008 முதல் ஐபிஎல் தொடரில் அனுமதி மறுத்து வருகிறது. தற்பொழுது இந்தியா - பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையே பெரியளவு மோதல் இல்லை என்றாலும், ஒன்றிய மோடி அரசு பாகிஸ்தான் வீரர்களை உலக தொடரில் விளையாட மட்டுமே விசா வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடர் பங்கேற்பு பற்றி ஏக்கமாக பேசி வருகின்றனர். ஆனால் அரசு அனுமதி முக்கியமானது என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பு தொடர்பாக சாதாரண ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை.
இத்தாலியின் 47 வருட போராட்டம்
டென்னிஸ் விளையாட்டில் நாடு களுக்கு இடையேயான மோத லாக கருதப்படும் டேவிஸ் கோப்பை தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் (ஸ்பெயினில் நடை பெற்றது) ஆஸ்திரேலியா - இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் பலமான ஆஸ்திரேலிய அணியை புரட்டியெடுத்து 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக 1976இல் நடை பெற்ற தொடரில் டேவிஸ் கோப்பையை கைப்பற்றிய இத்தாலி அணி, 47 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மீண்டும் மகுடம் சூடியுள்ளது. சின்னரால் மகுடம் ரோமானியர்களான இத்தாலியர்கள் கால்பந்து (அவர்களின் தேசிய விளை யாட்டு), கைப்பந்து, கூடைப்பந்து, ரக்பி, கார் - இருசக்கர - சைக்கிள் பந்தயங்கள் மற்றும் தடகளம் உள்ளிட்ட விளை யாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட வர்கள். டென்னிஸ் இத்தாலியர்களின் விளையாட்டு ஆர்வமான பட்டியலில் இல்லை என்றாலும், அந்த விளை யாட்டை புரிந்து ஆர்வமாக விளையாடும் வீரர்கள் அந்நாட்டிற்காக டென்னிஸ் விளையாட்டில் பெயரை ஏற்படுத்தி வரு கின்றனர். இதுதான் இத்தாலி நாட்டிற்கும் டென்னிஸ் விளையாட்டிற்கும் இடையே யான பிணைப்பு ஆகும். இதே நடை முறையில்தான் 1976 மற்றும் 2023 டேவிஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. 1976இல் நிக்கோலா பிட் ராஞ்செலி, பாவ்லோ பெர்டோலுசி, அட்ரி யானோ பனாட்டா மற்றும் கொராடோ பராசுட்டி ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்திய நிலையில், 2023இல் சின்னர், லொரான்ஸோ, அர்னால்டி, சீமோனே ஆகியோர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை பட்டம் வென்று இத்தாலிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.