games

img

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் பேருந்துகளில் இலவசமாக செல்ல ஏற்பாடு

சென்னை, மார்ச் 21- சென்னை சேப்பாக்கம் மைதா னத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசி கர்கள் ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகர பேருந்துகளில் இல வசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள் ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக் கம் மைதானத்தில் வெள்ளியன்று (மார்ச் 22) நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கெனவே ஆன்லைனில் துவங்கி முடிவடைந்துள்ளது.  இந்நிலையில் சென்னை சேப் பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டை காட்டி சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும், போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை காண்பித்து சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங் களுக்கு செல்லலாம் என்றும் குளிர் சாதன பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.  

கூடுதல் ரயில்கள்

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள் ளது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்க ளில் வேளச்சேரி - சிந்தாதிரிப் பேட்டை-வேளச்சேரி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். 22ஆம் தேதி மற்றும் 26ஆம் தேதி 2 நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக் கப்படும். வேளச்சேரியில் இருந்து சிந்தா தரிப்பேட்டைக்கு இரவு 10. 40க்கு  புறப்படும் ரயில் சேப்பாக்கத்துக்கு இரவு மணி 11. 8க்கும் சிந்தாதிரிப்பேட்டைக்கு இரவு மணி 11. 15க்கும் செல்லும். அதேபோல் மற்றொரு ரயில் இரவு மணி 11. 5க்கு வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு சேப்பாக்கத் துக்கு மணி 11.33க்கும் சிந்தாதிரிப் பேட்டைக்கு இரவு மணி 11. 40க்கும் செல்லும். அதேபோல் சிந்தாதிரிப்பேட் டையில் இருந்து இரவு 11. 20க்கு  ஒரு ரயிலும், 11. 45க்கு ஒரு ரயிலும் வேளச்சேரிக்கு புறப்படும். இந்த ரயிலானது சேப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இரவு மணி 11. 30க்கும், 11.55க்கும் வந்து செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.  

தோனி விலகல்

 இந்நிலையில், சிஎஸ்கே அணி யின் கேப்டன் பதிவியிலிருந்து தோனி விலகியுள்ளார். இந்நிலை யில், வியாழக்கிழமை ஐபிஎல் கோப்பை அறிமுக விழா நடை பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ருத்துராஜ் கெயிக்வாட் பங்கேற்றார். இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோது கிறது.

;