games

img

ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்துள்ள ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடம் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றிருப்பது இதுவே முதல்முறை. இன்று மீண்டும் ஏமாற்றினால் 'ஹாட்ரிக்' தோல்வியைச் சந்திக்க நேரிடும். எனவே சரிவிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

;